“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”
பனை ஏறும் தந்தை தொழிலில்
இருந்து தப்பித்து தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார்
“பெரியாரின் முரட்டுத்தனமான அணுகுமுறை
அதெல்லாம் சரிபட்டு வராதுங்க ”இதுமுடி
வெட்டும் தோழரின் மகனான எலக்ட்ரிக்கல் என்ஜினியர்.
“என்னங்க பெரியார் சொல்லிட்டா சரியா?
பிரமணனும் மனுசந்தாங்க. திராவிட இயக்கம்
இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?
” இப்படி ‘இந்தியா டுடே’ பாணியில்கேட்டவர்
அப்பன் இன்னும் பிணம் எரித்துக் கொண்டிருக
இங்கே டெலிபோன் டிபார்மென்டில்
சுபமங்களாவை விரித்தபடி சுஜாதா சுந்தர ராமசாமிக்கு
இணையாக இலக்கிய சர்ச்சைசெய்து கொண்டிருக்கும் அவருடைய மகன்.
ஆமாம் அப்படி என்னதான் செய்தார் பெரியார்?
1 comment Thursday 28 Aug 2008 | விமல் | கவிதைகள்
பெரியார் ஒன்றும் பெரிதாக கிழித்துவிடவில்லை
என்னை மானமுள்ளவனாக, தன்மானம் உள்ளவனாக சிந்திக்க செய்துள்ளார்.
அவர் பேசிய, எழுதியவை அனைத்தும் இலக்கியங்களே.மனிதனை மனிதனாக பார்க்கச் சொன்னார்.
நடுத்தர வர்க்க ஊசலாட்டம் என்று கம்யூனி°ட்டுகள் ஒரு வார்த்தையைப் பயன்படுத்துவர்ள்.
பெரியார் என்ன செய்தார்? என்று கேட்பவர்கள்
தயது செய்து ஒரு முறையாவது அவர் எழுதியுள்ள ஒரு கட்டுரை அல்லது ஒரு புத்தகம் படித்துப் பாருங்கள்.
தமிழகத்தில் தலைவிரித்தாடிய சாதி கொடுமை ஓரளவு தணிந்துள்ளது என்றால் என் பாட்டன் பெரியார் நடத்திய போராட்டமும் ஒரு காரணம்.
திருமணமான முதல் இரவு பண்ணையாரிடம் செல்ல வேண்டும் என்ற சாதி திமிரை உடைத்தவர் பெரியார். பெண்கள் மார்பு சேலை அணிய இருந்த தடையை எதிர்த்தவர் பெரியார்.
ஆணுக்கு நிகராக பெண் நடத்தப்பட வேண்டும் என்றார் பெரியார்.
பெரியார் என்ன கிழித்தார் என்று கேட்கிறீர்கள். அவர் எதையோ கிழித்து உள்ளார். எது என்று உங்ளுக்கு தெரியவில்லை.புத்தகங்களை படியுங்கள் எதைக் கிழித்தார் என்று தெரியும்.
விமலேந்திரா திருஞானசம்பந்தர்