தாலி கட்டுவதென்பது அன்று முதல் அப்பெண்ணைத் தனக்கு அடிமைப் பொருளாக ஏற்கிறான் என்பதும், அப்பெண் அன்று முதல் ஆணுக்கு அடிமையாகி விட்டாள் என்பது மான கருத்தைக் குறிப்பதற்குத்தான். இதன் காரணமாக் கணவன் மனைவியை என்ன செய்தாலும் யாருக்கும் கேட்க உரிமையில்லை, கணவன் தவறான முறையில் நடந்தால் அவனுக்குத்தண்டனையும் கிடையாது. (வி.15.4.61;1:பெ.செ)
இன்றையப் பெண் எவ்வளவோ கல்வியும் செல்வமும் நாகரிக அறிவும் கவுரவம் உள்ள சுற்றத்தாருக்குள்ளும் சகவாசத்துக்குள்ளும் இருந்துவந்தும்,
மிகப் பழங்காலப் பட்டிக்காட்டுக் கிராமவாசிப் பெண்களைவிட இளப்பமாய் நடந்து கொள்வதைப் பார்த்தால், நமக்கு எவ்வளவு சங்கடமாய் இருக்கிறது? இப்படிப்பட்ட பெண்கள் வயிற்றில் பிள்ளைகள் பிறந்து இவர்களால் வளர்க்கப்பட்டால், அவற்றிற்கு மனிதத்தன்மை எப்படி ஏற்படும்? (பெ.சி.மி.187)
நமக்கு பெண்கள் தங்களைப் பிறவி அடிமை என்று நினைத்துக் கொண்டிருப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும். (வி.22.3.43;3:4)
பெண்களே! வீரத் தாய்மார்களாக ஆக விருப்பப்படுங்கள். நீங்கள் மாறினால் உங்கள் கணவன்மார்களும் மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது மிகமிக எளிது. ஆண்கள் உங்களைத்தான் பிற்போக்காளிகள் என்று உங்கள் மீது பழிசுமத்தி வருகிறார்கள். அப்பழிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள், எதிர்காலத்தில் “இவள் இன்னாருடைய மனைவி” என்று அழைக்கப்படாமல், “இவன் இன்னாருடைய கணவன்” என்று அழைக்கப்பட வேண்டும்.(கு.5.6.48;14:2-3)
கணவனின் அளவுக்கு மீறிய அன்பையும், ஏராளமான நகையிலும் புடவையிலும் ஆசையையும், அழகில் பிரக்கியாதி பெறவேண்டுமென்ற விளம்பர ஆசையையும் பெற்ற பெண்களும், செல்வத்தில் புரளும் அகம்பாவப் பெண்களும் அடிமை வாழ்விலேயே திருப்தி அடைந்துவிடுவார்களே ஒழிய, சீர்திருத்தத்திற்குப் பயன்படமாட்டார்கள். (கு.29.9.40;15:3)
தங்களை நாகரிக நாரீமணிகள் என்று கருதிக் கொள்ளும் பெண்களெல்லாம்கூட நல்ல முறையில் ஆடை அலங்காரம் செய்துகொள்வதையும், நைசான நகைகள் போட்டுக்கொள்வதையும் சொகுசாகப் பவுடர் பூசிக் கொள்வதையும் தான் நாகரிகம் என்று கருதி வருகிறார்களே தவிர-ஆண்களுக்குச் சரிநிகர் சமானமாக வாழ்வதுதான் நாகரிகம் என்பதை உணர்ந்திருக்கவில்லை. (வி.11.10.48;3:2)
சாதாரணமாக, ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரை யாருக்கு உபயோகப்படுத்தலாமென்றால் முதலில் நமது பெண்மக்களுக்குத்தான் உபயோகப்படுத்தலாம். ஏனெனில் நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள் அவர்களுடைய தாய்மார்களே. அக் குழந்தைகளுக்கு 6,7 வயது வரையில் தாய்மார்களேதான் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். (கு.1.5.27;5:3)
இந்து மதத்தின் கல்வித் தெய்வமும், செல்வத் தெய்வமும் பெண் தெய்வங்களாயிருந்தும் இந்துமதக் கொள்கையின்படி பெண்களுக்கு கல்வியும் சொத்துக்களும் இருக்க இடமில்லையே ஏன்?(கு.3.11.29;8)
பெண்களை வீட்டுவேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்ட மடிப்பது என்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள். (கு.8.3.36;14:3)
இன்று நம்முடைய சமுதாயத்திற்கு இருக்கும் குறைகளுக்கும் அவமானத்திற்கும் நம் மூடநம்பிக்கைகளே காரணமாகும். அதுவும் நம் தாய்மார்களிடம் இவ்வளவு இருக்குமானால் பிறகு அவர்கள் வயிற்றில் பிறந்த பிள்ளைகளின் நிலை என்னாவாகும்?எந்தச் சீர்திருத்தமும் பெண் மக்களிடம் இருந்து வந்தால் அதற்கு வலிவு அதிகம். (கு.27.10.40;3:3)
இன்றையப் பெண்கள், வெறும் அலங்காரத்தோடு திருப்தியடைந்து விடுகிறார்கள், அல்லது திருப்தி செய்யப்பட்டு விடுகிறார்கள். எனவே இவர்களுக்கு விடுதலை வேட்கை பிறப்பது அரிதாயிருக்கிறது. (வி.26.5.58;1:பெ,செ.)
குழந்தை மணம் ஒழிந்து, திருமண ரத்து, விதவைமணம்,கலப்புமணம், திருமண உரிமை ஆகியவைகள் இருக்குமேயானால் இன்றுள்ள விபசாரத்தில் 100-க்கு 90 பகுதி மறைந்து போகும். (வி.21.3.50;பெ.செ.)
பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம், ஆனால் ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக்கின்றாள். அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போமேயானால் பெண்களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதனால் தாங்கள் ஆண்கள் இல்லாமல் வாழ முடியும் என்பதை ருசுபடுத்திக் கொள்ள முடியாதவர்களாயிருக்கிறார்கள். ஆண்களுக்கு அந்தத் தொந்தரவு இல்லாததால் தாங்கள் பெண்கள் இல்லாமல் வாழ முடியும் என்று சொல்ல இடமுள்ளவர்களாயிருக்கின்றார்கள். அன்றியும், அப்பிள்ளை பெறும் தொல்லையால் அவர்களுக்குப் பிறர் உதவி வேண்டியிருப்பதால் அங்கு ஆண்கள் ஆதிக்கம்ஏற்பட இடமுண்டாகி விடுகின்றது. எனவே உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போகவேண்டும். (கு.12.8.23;10:3)
2 comments Tuesday 09 Sep 2008 | நிர்மலா | பெண்ணியம்
பெண்ணியம் பற்றி பெரியார் சொன்னது இருக்கட்டும். பெண்விடுதலை என்றால் என்ன என்று நீங்கள் எனக்கு புரியும்படியாக கூற இயலுமா?
ஆழிக்கரைமுத்து
பெண்விடுதலை என்றால் என்ன? எனது பார்வையில்..
என்னைப்பொறுத்தவரை பெண்விடுதலையானது பல கோணங்களில் பார்க்கபடவேண்டிய ஒன்று. காரணம் பல்வேறு சமூகங்களில் பெண்கள் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள். எனவே இந்த பிரச்சினை அந்தந்த சமூகன்களின் அடிப்படயை வைத்தே நோக்கப்படுதல் வேண்டும். பெண்களின் விடுதலை என்பதனை நான் இப்படி பார்க்கின்றேன். கீழத்தேசத்து பெண்களின் பிரச்சினைகள் ஒருவிதமாகவும். மேலைத்தேசத்து பெண்களின் பிரச்சினை இன்னொரு விதமாகவும். இருவேறு கலாச்சாரங்களில் சிக்கி தவிக்கின்ற பெண்களின் பிரச்சினை வேறொரு விதமாகவும் பார்க்கப்படுதல் வேண்டும்.
இப்போது கீழைத்தேசத்து நாடுகளில் உள்ள பெண்களின் பிரச்சினதனை பற்றி பார்ப்போமேயானால். மற்றவர்களை விடவும் கீழ்த்தேசத்து பெண்கள் மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள். காரணம் இவர்களில் பெரும்பாலானோருக்கு அடிப்படை உரிமைகளான கல்வி, பேச்சு சுதந்திரம் போன்ற பல விடயங்கள் மறுக்கப்படுவதோடு, தினமும் அவளது கணவனாலோ, தகப்பனாலோ இல்லை மகனாலோ அடித்து உதைத்து, வாற்தைகளால் வசைபாடப்பட்டு கொடுமைபடுத்தப்படிகின்றாள். இவற்றிற்கு காரணம் கீழ்த்தெய நாடுகளில் நிலவக்கூடிய பிற்போக்கு சிந்தனை, நான் என்கின்ற ஆண்நிலை போக்கு, பொருழாதாரச்சுமை, சமூகச்சீர்கேடு. சமூகச்சீர்கேடன மதுவுக்கு அடிமயாதல், கட்டாய பாலியல் வல்லுறவு, சீதணக்கொடுமை போன்ற நச்சு வலைகளில் கீழத்தேசத்து பெண்கள் சிக்குண்டு தவிக்கின்றனர். அதிலும் நமது தமிழ்சமூகத்தில் இருக்கக்கூடிய சீதண முறை பெண்களின் வாழ்வை சீரளிப்பதோடு நின்றுவிடாமல், ஒட்டுமொத்த நமது தமிழ்சமூகத்தையுமே பாதாளத்தை நோகித் தள்ளக்கூடிய ஒரு கொடிய விசம். இந்த சீதணம் என்னும் கொடியவிசத்தின் தோற்ரம் பற்றிய கருத்துக்கள் எவ்வாறாக இருந்தாலும், இன்று தமிழ் சமூகத்தின் கழுத்தை நெரிக்கின்ற இக் கொடிய பாம்பின் விசம் அகற்றப்படவேண்டியதே. இங்கு வேதனைக்குரிய விடயம் யாதெனில், புலத்து உறவுகளும் இதற்கு ஊக்கம் கொடுத்து வரவேற்பதுவே. இப்படி அடிநிலை பிரச்சினைகளை தாண்டுவதே பெரும் சவாலாக, நமது கீழத்தேச பெண்விடுதலையாளர்கள் முன் இருக்கின்றது. இதில் தமிழ் ஈழப்பகுதியில் வாள்கின்ற பெண்கள் மிகவும் துணிச்சல் மிக்கவர்களாக காணபடுகின்றார்கள்.
இப்படி அவர்களின் நிலை இருக்க. மேலைத்தேச நாட்டுப் பெண்களின் உரிமை வேறுவிதத்தில் மறுக்கப்படுகின்றது. இருந்தாலும் இவர்கள் கீழத்தேச பெண்களோடு ஒப்பிடுகையில். பலமடங்கு சுதந்திரம் பெற்றவர்களாகவே காணப்படுகின்றார்கள். ஆனாலும் இந்த சமூகத்துக்கு ஏற்றாற்போல இவர்களிற்கு இவை பாரிய பிரச்சினையே. ஊதியம் வழங்கிவதில் பாகுபாடு, பென்களுக்கெதிரான பாலியல்வன்முறை, பென்களுக்கெதிரான வன்முறை என நீண்டு செல்கின்றன. சமூக சீர்கேடுகள் இவர்களுக்கும் ஒரு பாரிய பிரச்சனையாக இருக்கின்றது. இப்படி ஆண்களால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் மன உளச்சலுக்கும் ஆளாகி இருக்கின்றார்கள் என்பது வேதனைக்குரியவிடயம்.
மேற்குறிப்பிட்ட கீழத்தேச மேலைத்தேச பெண்களின் பிரச்சினைகளில் இருந்து சற்று வேறுபட்டது நமது புலம்பெயர் பெண்களுடய பிரச்சினை. இவர்கள் இரண்டு கலாச்சாரங்களின் விளிம்பில் இருப்பவர்கள். இவர்களில் சிலருக்கு தாம் அதிகம் சுதந்திரம் அடந்துவிட்டதைப்போல தோன்றும். சிலருக்கு அவர்கள் தாம் மிகவிம் கொடுமை படுத்தபடுவதைப்போலதோன்றும். சில பெண்கள் தமது சுதந்திரம் தொலைக்காட்சி நாடகம் பார்ப்பதற்கு ஆண்கள் அனுமதிப்பதே என எண்ணுகின்றார்கள். அது அவர்கள் எந்த தழ்த்தில் இருந்து தங்கள் சுதந்திரத்தை பார்க்கின்றார்கள் என்பதை பொறுத்து அமைகின்றது போல இருக்கின்றது. இவர்களும் ஒரு புதிய சமூகதுள் பெரவேசித்தமயால், இவர்களும் சமூக சீர்கேடு என்னும் சவாலை சந்திக்க வேண்டி இருக்கும்.
ஆனால் சில புலம்பெயர்ந்த ஆண்கள் தாமே பெண்களால் வஞ்சிக்கப்படுவதாகவும் கூறுகின்றார்கள். இதற்க்குக்காரணம் இவர்கள் தங்களது கடந்தகால வாழ்க்கை முறையை சிந்திக்கின்ற பொழுது. புதிய சமூகத்தின் சட்டங்கள் இவர்களின் பழய வாள்க்கை முறைக்கு ஒவ்வாமையாலும், தம்மிடம் இருந்து பல அதிகாரங்கள் இடம் மாறுவதனைப்போலவே, இவ்வாறான புலம்பெயர் ஆண்களிற்கு தோன்றலாம். நானும் ஒரு ஆண்மகன். ஆண்களின் பெண்கள்மீதான அடக்குமுறைதனை, ஒரு தாயின் மகனாக, சகோதரிகளின் அண்ணன் தம்பியாக நேரில் கண்டு அவர்களின் துன்பத்தில் பங்கு கொண்டவன் என்கின்ற வகையில். பெண்களின் விடுதலைக்கான தேவைதனை உணருகின்றேன். சில பெண்கள் இப்படியும் கேட்கின்றார்கள் “நீங்கள் (ஆண்கள்) யார் பெண்களுக்கு விடுதலை வாங்கி தருவதற்கு?” என்று. அந்த பெண்மணியின் கேள்வியில் சிலநேரம் நிஞாயம் இருக்கலாம். இப்படி பெண்களின் உரிமைக்காக பேசும் எனது பேசிலும் சுயனலம் இருக்கலாம். ஆனால் எனது பார்வையில் எனது தாய், அக்க, தங்கை இவர்கள் விடுதலை பெற்றாலே நானும் பல சமூக கட்டுக்களில் இருந்து விடுதலை பெறமுடியும். எனவே எனது வேதனை எல்லாம் தமிழ்சமூகம் தன்னையும் கட்டி என்னையும் கட்டி பெண்களையும் கட்டிபோட்டுள்ளதாகவெ நான் உணருகின்றேன். எனவே பெண்கள் விடுதலை ஒரு சமூகத்தின் விடுதலை என நான் கருதுகின்றேன்.
நட்புடன்!
விமல்