Archive for November 2008

ஜாதியைக் காப்பாற்றும் பல சாதி அபிமானிகளுக்கு ஓர் எச்சரிக்கை

சாதியைக் காப்பாற்றும் பலசாதி அபிமானிகளே! ஆதியில் ஏற்பட்ட நான்கு சாதிகள், 4,000 சாதிகளாகப் பிரிந்ததற்குக் காரணம் ஒரு சாதியும், மற்றொரு சாதியும் மாறிமாறிக் கலந்ததால் ஏற்பட்டது என்று குறித்தும், அப்படி இருந்தும் இன்னும் நம்மவரிலேயே ஒரு கூட்டத்தார் அதாவது, தங்களை ‘வேளாளர்’ என்று சொல்லுபவர்களில் ஒரு சிலர் மேற்படி சாதிக் கிரமத்தை அதாவது ‘ஆதிசாதி’ என்பவைகளான பிராமணன், ஷத்ரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற கிரமத்தை ஒப்புக் கொண்டு தங்களை மாத்திரம் ‘சற்சூத்திரர்’ என்று அழைத்துக் கொண்டும், மற்றொரு சிலர் அச்சாதிக் கிரம வார்த்தைகளை வடமொழிப் பெயர்களால் சொல்லாமல் தென்மொழிப் பெயரால் சொல்லிக் கொள்கின்றனர். (more…)

கொலைகாரனிடமிருக்க வேண்டிய ஆயுதங்கள் கடவுளுக்கு எதற்கு?

இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்குள் தோன்றியதுதான் இந்தக் கடவுள் சங்கதி. அதுவும் இந்தக் கடவுளை நமது ஆள் உண்டாக்கவில்லை. வெள்ளைக்காரன்தான் இந்தக் கடவுளையே உண்டாக்கியவன். அதைப் பார்ப்பான் ஒன்றுக்குப் பத்தாகப் பெருக்கி விட்டான். ஒரு கடவுள் பெயர் கூடத் தமிழ்ப் பெயரே கிடையாது. இங்கு இருக்கிற கடவுள்களின் பெயர்கள் எல்லாம் வடமொழிச் சொற்கள்தான். கடவுள் என்ற சொல்லே தமிழில் கிடையாது. தமிழனுக்குக் கடவுளே இல்லை. இன்றைக்கும் தமிழ்ச் சொல்லில் உள்ள ஒரு கடவுளும் கிடையாது. (more…)

சைமனா சீமான்?

‘சைமன் என்கிற சீமான் இந்து மதத்தை திட்டி பேசுகிறார்’ என்று பி.ஜே.பியை சேர்ந்த எச். ராஜா சொல்லியிருக்கிறாரே?

-எல். சுரேஷ்.

 

Mathi Book intro function

 

சீமான் – சைமன் இல்லை. அவர் கிறித்தவரும் இல்லை.

அவருடைய பாஸ்போர்ட்டிலிருந்து அவரை பற்றிய ஆவணங்கள் எல்லாமே சீமான் என்கிற பெயரில்தான் இருக்கிறது.

 

அவர் பெரியார் கொள்கையில் ஊறிய நாத்திகர்.

 

கோவை கூட்டத்தில், ‘இந்துக்களின் ஆண்குறியை வெட்ட வேண்டும். பெண்களை கற்பழிக்க வேண்டும்’ என்று சீமான் பேசியதாக ஒரு பச்சை பொய்யை பரப்பினார்கள் அல்லவா? அதுபோன்ற ஒரு பொய்தான் அவர் சைமன் என்பதும். (more…)

இயக்குநர் சீமானைக் கண்டு நடுங்குகிறது ஆர்.எஸ்.எஸ் மதவெறி கும்பல்

கு.ராமகிருஷ்ணன், சீமான், ஆறுச்சாமி

24 ஆம் தேதி கோவையில் ‘வே. மதிமாறன் பதில்கள் நூல் அறிமுக விழா’ பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில், இயக்குநர் சீமானின் சிறப்புரையோடு சிறப்பாக நடந்து முடிந்தது. (more…)

காமராஜரின் சிறப்பு எது? எளிமையா? பெரியாரா?

(24 ஆகஸ்ட் 2008 அன்று கோவையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில், அதன் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமையில், சீமானின் சிறப்புரையோடு நடந்த ‘வே. மதிமாறன் பதில்கள்’ நூல் அறிமுக விழாவில் வே. மதிமாறனின் ஏற்புரை.)

தொடர்ச்சி

 

* ஒரு முறை நான் டைரக்டர் மகேந்திரன் வீட்டுக்கு போயிருந்தப்ப, காமராஜர் பட இயக்குனர் பாலகிருஷ்ணன் அங்கே இருந்தார். அப்போ கமராஜர் படபப்பிடிப்பு நடந்துக்கிட்டிருந்த நேரம். அவரை எனக்கு டைரகடர் மகேந்திரன் அறிமுகப் படுத்திவைத்தார். உடனே நான் பாலகிருஷ்ணன் கிட்ட கேட்டது, “பெரியாரா யார் நடிக்கிறாங்க?”
அதுக்கு பாலகிருஷ்ணன், “படத்துல பெரியார் கேரக்டரே இல்ல”என்றார். (more…)