Archive for November 2008

FITNA “Killing in the Name of God” film about the Quran (English)

மனுநீதி

சூத்திரனுக்குத் தர்மம்

சூத்திரன் சுவர்க்கத்திற்காவது , ஜீவனத்திற்காவது அல்லது இரண்டிற்குமாவது , பிராமணனையே தொழவேண்டும். இவன் பிராமணனை அண்டிய சூத்திரன் என்று ஒருவனுக்குப் பெயர் வந்தால் அதே அவனுக்குப் பாக்கியம். (அத் 10. சு .122)

 

பிராமணர்களை வழிபடாததனாலும் உபநயனம் முதலிய சடங்குகள் செய்துகொள்ளாததனாலும் சத்திரியர் வரவர சூத்திரத் தன்மை அடைந்தார்கள். (அத்10. சு.43) (more…)

பஜனைப் பாட்டுப் பாடவா தமிழ் இசையை வலியுறுத்தினோம்? – பெரியார்

தமிழ் இசையை நாம் ஏன் வேண்டுகிறோம்? எதற்காக நமக்குத் தமிழில் இசை வேண்டுமென்கிறோம்? தமிழ் மொழியை ஏன் வேண்டுகிறோம்? ஸ்காந்தத்தை ‘கந்த புராணம்’ என்றும், கிருஷ்ணனை ‘கிருட்டிணன்’ என்றும், ‘ஹோம் நமஹா என்பதை ‘ஓம் நமோ’ என்றும், நரசிம்ஹமூர்த்தி என்பதை ‘சிங்கமுகக் கடவுள்’ என்றும், தசகண்ட ராவணன் என்பதை ‘பத்துத்தலை இருட்டுத் தன்மையன்’ என்றும் மொழி பெயர்த்துக் கொண்டு வணங்கி, நம்பி, திருப்தி அடையவா என்று கேட்கிறேன். (more…)

உறவின் கதை

கந்தசஷ்டி

இந்த சுப்ரமணியன் பிறப்பு அல்லது கந்தசஷ்டி என்பது புராண ஆபாசங்களில் மோசமான ஒன்றாகும். ஒரு சமயம் தேவர்கள் எல்லாம் போய் சிவனிடம் கேட்டார்களாம்.

” உலகில் ராட்சதர் கொடுமை அதிகமாய்விட்டது; அதை எங்களால் தாங்கமுடியவில்லை. ஆகவே அதைத் தாங்கக்கூடிய அளவுக்கு அவர்களை அழிக்கக்கூடிய வல்லமை பொருந்திய ஒரு பிள்ளையைப் பெற்றுத் தரவேண்டும்” என்று வேண்டினார்கள் . அதற்குச் சிவனும் இணங்கி பார்வதியைத் திருமணம் செய்துகொண்டு பிள்ளைபெறும் முயற்சியில் அவளோடு கலவிசெய்ய இறங்கினானாம். (more…)