• முதன் முதலாக உலக தமிழர்களுக்காக பகுத்தறிவு கருத்துக்களை இணைய வானொலி மூலமாக வழங்க பெரியார் பன்னாட்டு அமைப்பு ஐக்கிய அமெரிக்கா மற்றும் பெரியார் மீடியா யுனிட் மூலம் செயல்படும் இணைய வானொலி பெரியார் குரல் ஜெர்மன் நாட்டு அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்றது.
  • தமிழர்களின் பாரம்பரியத்தை தமிழ் மக்கள் மத்தியில் வெளிக்கொண்டு வரும் நோக்கத்தோடும், தந்தை பெரியாரின் கருத்துக்களையும், பகுத்தறிவுச் சிந்தனைகளையும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்தோடும் உருவாக்கப்பட்டது இணைய வானொலி பெரியார் குரல்.
  • பெரியார் குரல் இணைய வானொலியில் செயல்படும் உறுப்பினர்கள் அனைவரும் அரசியல் சார்பற்ற எந்த அமைப்பையும் சாராத சுயசிந்தனையாளர்கள்..
  • எமது குழுவின் நோக்கம் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இனத்தின் சுய சிந்தனைகளை கூர் தீட்டும் நோக்கத்தோடு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும், பகுத்தறிவு சார்ந்த கருத்துக்களை மருத்துவ நிபுணர்கள் குழு மூலமும் உங்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முனைகிறோம்.
  • பெண்ணீயம் சார்ந்த விடயங்கள் குறித்த ஆலோசனைகளுக்கு பெண் மருத்துவர்கள் உங்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க இருக்கிறார்கள்.
  • மனநலம், உடல் நலம், குழந்தை வளர்ப்பு மற்றும் பாலியல் தொடர்பான கேள்விகளுக்கு ஆலோசனைகளும் வழங்கப்படும்.
  • எமது தளத்திற்கு வருகை தருபவர்கள் உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களைத் தெரிவித்தால் நாம் மேலும் எமது சேவையை மேலும் மேம்படுத்த அது வாய்ப்பாக அமையும். 
  • எந்தவிதமான வியாபார நோக்கமும் அல்லாத சேவை உள்ளம் கொண்ட  அங்கத்தவர்களால் நிர்வகிக்கப்படும் இந்த இணைய வானொலி ,ஆர்வமுள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றது. 
மிகவும் நன்றி
..::பெரியார் குரல்::..