ஆணுக்கு ஆண் கூடிப் பிறந்தவன் அய்யப்பன்

அய்யப்பன் சீசன் துவங்கி விட்டது. பக்தர்கள் என்ற போர்வையில் ஒவ்வொரு நகரத்தையும் அசுத்தம் செய்து சுகாதரக்கேடு உண்டாக்கி அந்தந்த பகுதி மக்களுக்கு நோயைப் பரப்பி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க மாலையைப் போட்டுக்கொண்டு ஒழுக்கமாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டு அனைத்து ஒழுக்ககேடுகளும் செய்து வருகிறனர். பொது இடங்களில் புகைபிடிக்ககூடாது என்ற சட்டம் இருக்கிறது ஆனால் அதை சிறிதும் பொருட்படுத்தாமல் வாயில் பீடியுடன் திரிகின்றனர்.

இரண்டு சக்கர வாகனங்களில் செல்லும் போது கூட புகையை ஊதித் தள்ளி மக்களுக்கு இன்னல் விளைவிக்கின்றனர். இது போல் பல உள்ளன. எழுதிக்கொண்டே போகலாம். நிற்க.

இப்போது அய்யப்பன் கதைக்கு வருவோம்.  மேலும் படிக்க

தீபாவளி தமிழர் விழாவா?

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்!

Continue Reading »

உலகில் பெரியார் ஒருவரே!

oct251938 ஆம் ஆண்டு இதே நாளில் (டிசம்பர் 29) தான் தந்தை பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுவும் எந்த நிலையில்?

தந்தை பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் காரணமாக சிறையில் இருந்த காலகட்டத்தில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கமான நீதிக்கட்சியின் கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும்…

தாலி பற்றி பெரியார் சொல்கிறார்!

பொன்மொழிகள்
பெண்கள் மனிதத்தன்மை அற்றதற்கும்,

அவர்களது சுயமரியாதை அற்றத்தன்மைக்கும்,

இந்தப் பாழும் தாலியே அறிகுறியாகும்.

புருஷர்களின் மிருக சுபாவத்திற்கும்,

இந்த தாலி கட்டுவதே அறிகுறியாகும்.

ஆனால் தங்களை ஈனப்பிறவி என்று நினைத்துக்

கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த வார்த்தை

பிடிக்காது தான். இப்போது தாலி கட்டிக் கொண்டிருக்கும்

பெண்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி வந்திருந்தால்

அறுத்தெரியட்டும். அல்லது –

புருஷர்கள் கழுத்திலும் ஒரு கயிறு கட்ட வேண்டும்.

தங்களைத் தாங்களே அடிமை என்று நினைத்துக்

கொண்டிருக்கின்ற சமூகம் என்றும் உருப்படியாகாது. …….[மேலும்…]

சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை பெரியாரின் பிறந்த நாள் இன்று

1879 செப்டம்பர் 17: ஈரோட்டில் பெரியார் பிறந்தார். பெற்-றோர்: வெங்கட்ட (நாயக்கர்) – சின்னத்தாயம்மாள், உடன்பிறந்-தோர்: ஈ.வெ.கிருஷ்ணசாமி, கண்ணம்மாள், பொன்னுத்தாய்.
1885 – 1889: வயது 6 முதல் 10 வயதுவரை 5 ஆண்டு பள்ளிப்படிப்பு
1895: திராவிடத்தைச் சதியால் அடக்கி ஆண்ட ஆரி-யத்தை கூர்மதியால் (தமது இல்லத்தில் நடக்கும் மதப்-பிரசங்கங்களில்) குறுக்குக் கேள்விகேட்டு பொய்யையும், புரட்டையும் கற்பனையையும் தோலுரித்து பகுத்தறிவுப் புரட்சியைத் தொடங்கிவிட்டார் இயல்பாய் இளம்வயதிலேயே. மேலும்…