கொலைகாரனிடமிருக்க வேண்டிய ஆயுதங்கள் கடவுளுக்கு எதற்கு?

இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்குள் தோன்றியதுதான் இந்தக் கடவுள் சங்கதி. அதுவும் இந்தக் கடவுளை நமது ஆள் உண்டாக்கவில்லை. வெள்ளைக்காரன்தான் இந்தக் கடவுளையே உண்டாக்கியவன். அதைப் பார்ப்பான் ஒன்றுக்குப் பத்தாகப் பெருக்கி விட்டான். ஒரு கடவுள் பெயர் கூடத் தமிழ்ப் பெயரே கிடையாது. இங்கு இருக்கிற கடவுள்களின் பெயர்கள் எல்லாம் வடமொழிச் சொற்கள்தான். கடவுள் என்ற சொல்லே தமிழில் கிடையாது. தமிழனுக்குக் கடவுளே இல்லை. இன்றைக்கும் தமிழ்ச் சொல்லில் உள்ள ஒரு கடவுளும் கிடையாது. Continue Reading »

கந்தசஷ்டி

இந்த சுப்ரமணியன் பிறப்பு அல்லது கந்தசஷ்டி என்பது புராண ஆபாசங்களில் மோசமான ஒன்றாகும். ஒரு சமயம் தேவர்கள் எல்லாம் போய் சிவனிடம் கேட்டார்களாம்.

” உலகில் ராட்சதர் கொடுமை அதிகமாய்விட்டது; அதை எங்களால் தாங்கமுடியவில்லை. ஆகவே அதைத் தாங்கக்கூடிய அளவுக்கு அவர்களை அழிக்கக்கூடிய வல்லமை பொருந்திய ஒரு பிள்ளையைப் பெற்றுத் தரவேண்டும்” என்று வேண்டினார்கள் . அதற்குச் சிவனும் இணங்கி பார்வதியைத் திருமணம் செய்துகொண்டு பிள்ளைபெறும் முயற்சியில் அவளோடு கலவிசெய்ய இறங்கினானாம். Continue Reading »

புராணங்களும் வேதங்களும் கள் குடித்த பைத்தியக்காரனின் உளறல்களே !

இன்று தமிழர் சமுதாயம்தான் உலகிலேயே காட்டுமிராண்டி வாழ்வு வாழ்ந்து வருகிற சமுதாயமாக இருக்கிறது. உலகிலுள்ள 280 கோடி மக்களில் யாரும் இவ்வளவு பிறவி இழிவான நிலையில் முட்டாள்தனமாக வாழ்பவர்களில்லை. நமது நாட்டைப் பிடித்துள்ள ‘நோய்கள்’ மூன்று. அவை : 1. கடவுள், மதம், சாஸ்திரங்கள் 2. சாதி 3. ஜனநாயகம் என்பன. நம்மை அரித்துவரும் நோய்கள்: 1. பார்ப்பான் 2. பத்திரிகைகள் 3. அரசியல் கட்சிகள் 4. தேர்தல்கள் 5. சினிமா ஆகிய இவைகள் ஒழிக்கப்பட்டாலொழிய நமது வாழ்வு சீர்படாது என்று, நான் இங்கு மட்டுமல்ல வடநாட்டிலும், கன்னட, கேரள மாநிலங்களிலும் லட்சக்கணக்கான பொது மக்கள் கூடிய கூட்டங்களில் ஆண்டுக்கணக்காக எடுத்துரைத்து வந்திருக்கிறேன். Continue Reading »

சரஸ்வதி பிரம்மனால் உண்டானவளா? அகத்தியரிடத்தில் உற்பத்தியானவளா?

சரஸ்வதி பூஜை கொண்டாடும் தமிழா சரசுவதியின் கதையை அறிவுப்பூர்வமாக அறிந்து கொண்டுதான் கொண்டாடுகிறாயா? சரசுவதியின் கதையை இப்போது அறிந்து கொள்.அதன்பின் சரசுவதி பூஜை கொண்டாடியது எவ்வளவு அசிங்கமான செயல் எனபதை உணர்வாய்!. இதோ சரசுவதியின் கதை:

சரஸ்வதியா? சரசவதியா?
Continue Reading »

தாய்மொழிக் கல்வி

மொழி

கோடிக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்த சூரியக்குடும்பத்தின் புவிக்கோளிலே மனித இனத்தின் பிறப்பு புல்லின் நுனித்தொலைவே எனலாம். இத்தகைய குறுகிய பதிவினைக் கொண்ட மனித இனம் சாதாரணத் தோற்றமல்ல. நீண்டப்பயணதிற்கு ஓடிக்கொண்டிருக்கும் பரிணாம வளர்ச்சியின் நடப்புநிலையே. இந்த மனித இனம் மற்ற உயிரினத்தைப்போன்றே பிறத்தல்,உணவுத்தேடல்,உயிர்வாழ்தல்,சாதல் என வழக்கமான செயல்களினூடெ பகுத்தறியும் குணம் கொண்டிருக்கிறது. அதாவது, சிந்திக்கக்கூடிய உயிரினமாக உள்ளது. இருவேறு மனிதர்களுக்கிடையேயான எண்ணப்பகிர்வுக்கு ஊடகமாக மொழியானது உருவாக்கப்பட்டு,வடிவமைக்கப்பட்டு,வழிநடத்தப்படுகிறது. Continue Reading »