கடவுளை நம்பும் முட்டாள்களே!

கடவுள்களை நம்பும் முட்டாள்களே!

அதாவது கடவுள் ஒருவர் இருக்கிறார்;

அவரே உலகைப் படைத்து காத்து நடத்தி வருகிறார்;

அவரன்றி ஒரு அணுவும் அசையாது;

அவரே உலக நடப்புக்குக் காரணஸ்தர் ஆவார்

என்றெல்லாம் கருதி வரும் முட்டாள்களே!

கடவுளால் உலகத்திற்கு, மனித சமூதாயத்திற்கு, ஜீவ கோடிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன? மேலும்…

புராணங்களும் வேதங்களும் கள் குடித்த பைத்தியக்காரனின் உளறல்களே !

இன்று தமிழர் சமுதாயம்தான் உலகிலேயே காட்டுமிராண்டி வாழ்வு வாழ்ந்து வருகிற சமுதாயமாக இருக்கிறது. உலகிலுள்ள 280 கோடி மக்களில் யாரும் இவ்வளவு பிறவி இழிவான நிலையில் முட்டாள்தனமாக வாழ்பவர்களில்லை. நமது நாட்டைப் பிடித்துள்ள ‘நோய்கள்’ மூன்று. அவை : 1. கடவுள், மதம், சாஸ்திரங்கள் 2. சாதி 3. ஜனநாயகம் என்பன. நம்மை அரித்துவரும் நோய்கள்: 1. பார்ப்பான் 2. பத்திரிகைகள் 3. அரசியல் கட்சிகள் 4. தேர்தல்கள் 5. சினிமா ஆகிய இவைகள் ஒழிக்கப்பட்டாலொழிய நமது வாழ்வு சீர்படாது என்று, நான் இங்கு மட்டுமல்ல வடநாட்டிலும், கன்னட, கேரள மாநிலங்களிலும் லட்சக்கணக்கான பொது மக்கள் கூடிய கூட்டங்களில் ஆண்டுக்கணக்காக எடுத்துரைத்து வந்திருக்கிறேன். Continue Reading »

தீபாவளியா?…

இந்தத் தீபாவளி பற்றிய ஒவ்வொரு செய்தியும் ஒன்றுடன் ஒன்று இடிக்கிறது. இது எல்லாவற்றையுமவிடக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்பதும் உண்மை அன்று. தீபாவளி கொண்டாட்டமும் ஒவ்வொரு பகுதியிலும் வேறு வேறு விதமான வழிபாட்டு முறைகளும் சடங்குகளும் உடையதாக இருக்கிறது. உண்மையை உரக்கச் சொல்வது என்றால் தீபாவளியின் தோற்றம் பற்றிய புதிய எந்த விவரமும் கடவுள் நம்பிக்கையுடையவரும் நம்பும்படியானதாக இல்லை. Continue Reading »

தீபாவளி கொண்டாடலாமா?

துன்பம் தரும் தீபாவளி

தீபாவளி என்கின்ற வார்த்தைக்கு விளக்கு வரிசை அதாவது விளக்குகளை வரிசையாக
வைத்தல் என்பது பொருள். இது கார்த்திகை தீபம் என்னும் பெயரில் பண்டிகை
நாட்களில் செய்யப்பட்டு வருகிறது. வடநாட்டில் விளக்கு வரிசை வைத்துத்தான்
தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளிப் பண்டிகை தினத்தை, நரக சதுர்த்தசி
என்றும் சொல்வதுண்டு. இதற்குக் காரணம், நரகாசுரன் என்பவன் விஷ்ணுவால்
கொலை செய்யப்பட்டநாள் என்பதாலும். இந்தக் கதை விளக்கம் என்னவென்றால், அது
மிகவும் ஆபாசமானது என்றாலும் ஆரியர்களின் இழிநிலைக்கும், தமிழர்களின்
முட்டாள்தனத்துக்கும் ஆதாரத்துக்காக அதைவும் ஆரியப் புராணப்படியே சற்றுச்
சுருக்கமாக விளக்குவோம். Continue Reading »

சரஸ்வதி பிரம்மனால் உண்டானவளா? அகத்தியரிடத்தில் உற்பத்தியானவளா?

சரஸ்வதி பூஜை கொண்டாடும் தமிழா சரசுவதியின் கதையை அறிவுப்பூர்வமாக அறிந்து கொண்டுதான் கொண்டாடுகிறாயா? சரசுவதியின் கதையை இப்போது அறிந்து கொள்.அதன்பின் சரசுவதி பூஜை கொண்டாடியது எவ்வளவு அசிங்கமான செயல் எனபதை உணர்வாய்!. இதோ சரசுவதியின் கதை:

சரஸ்வதியா? சரசவதியா?
Continue Reading »