கொலைகாரனிடமிருக்க வேண்டிய ஆயுதங்கள் கடவுளுக்கு எதற்கு?

இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்குள் தோன்றியதுதான் இந்தக் கடவுள் சங்கதி. அதுவும் இந்தக் கடவுளை நமது ஆள் உண்டாக்கவில்லை. வெள்ளைக்காரன்தான் இந்தக் கடவுளையே உண்டாக்கியவன். அதைப் பார்ப்பான் ஒன்றுக்குப் பத்தாகப் பெருக்கி விட்டான். ஒரு கடவுள் பெயர் கூடத் தமிழ்ப் பெயரே கிடையாது. இங்கு இருக்கிற கடவுள்களின் பெயர்கள் எல்லாம் வடமொழிச் சொற்கள்தான். கடவுள் என்ற சொல்லே தமிழில் கிடையாது. தமிழனுக்குக் கடவுளே இல்லை. இன்றைக்கும் தமிழ்ச் சொல்லில் உள்ள ஒரு கடவுளும் கிடையாது. Continue Reading »

சைமனா சீமான்?

‘சைமன் என்கிற சீமான் இந்து மதத்தை திட்டி பேசுகிறார்’ என்று பி.ஜே.பியை சேர்ந்த எச். ராஜா சொல்லியிருக்கிறாரே?

-எல். சுரேஷ்.

 

Mathi Book intro function

 

சீமான் – சைமன் இல்லை. அவர் கிறித்தவரும் இல்லை.

அவருடைய பாஸ்போர்ட்டிலிருந்து அவரை பற்றிய ஆவணங்கள் எல்லாமே சீமான் என்கிற பெயரில்தான் இருக்கிறது.

 

அவர் பெரியார் கொள்கையில் ஊறிய நாத்திகர்.

 

கோவை கூட்டத்தில், ‘இந்துக்களின் ஆண்குறியை வெட்ட வேண்டும். பெண்களை கற்பழிக்க வேண்டும்’ என்று சீமான் பேசியதாக ஒரு பச்சை பொய்யை பரப்பினார்கள் அல்லவா? அதுபோன்ற ஒரு பொய்தான் அவர் சைமன் என்பதும். Continue Reading »

இயக்குநர் சீமானைக் கண்டு நடுங்குகிறது ஆர்.எஸ்.எஸ் மதவெறி கும்பல்

கு.ராமகிருஷ்ணன், சீமான், ஆறுச்சாமி

24 ஆம் தேதி கோவையில் ‘வே. மதிமாறன் பதில்கள் நூல் அறிமுக விழா’ பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில், இயக்குநர் சீமானின் சிறப்புரையோடு சிறப்பாக நடந்து முடிந்தது. Continue Reading »

காமராஜரின் சிறப்பு எது? எளிமையா? பெரியாரா?

(24 ஆகஸ்ட் 2008 அன்று கோவையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில், அதன் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமையில், சீமானின் சிறப்புரையோடு நடந்த ‘வே. மதிமாறன் பதில்கள்’ நூல் அறிமுக விழாவில் வே. மதிமாறனின் ஏற்புரை.)

தொடர்ச்சி

 

* ஒரு முறை நான் டைரக்டர் மகேந்திரன் வீட்டுக்கு போயிருந்தப்ப, காமராஜர் பட இயக்குனர் பாலகிருஷ்ணன் அங்கே இருந்தார். அப்போ கமராஜர் படபப்பிடிப்பு நடந்துக்கிட்டிருந்த நேரம். அவரை எனக்கு டைரகடர் மகேந்திரன் அறிமுகப் படுத்திவைத்தார். உடனே நான் பாலகிருஷ்ணன் கிட்ட கேட்டது, “பெரியாரா யார் நடிக்கிறாங்க?”
அதுக்கு பாலகிருஷ்ணன், “படத்துல பெரியார் கேரக்டரே இல்ல”என்றார். Continue Reading »

மனுநீதி

சூத்திரனுக்குத் தர்மம்

சூத்திரன் சுவர்க்கத்திற்காவது , ஜீவனத்திற்காவது அல்லது இரண்டிற்குமாவது , பிராமணனையே தொழவேண்டும். இவன் பிராமணனை அண்டிய சூத்திரன் என்று ஒருவனுக்குப் பெயர் வந்தால் அதே அவனுக்குப் பாக்கியம். (அத் 10. சு .122)

 

பிராமணர்களை வழிபடாததனாலும் உபநயனம் முதலிய சடங்குகள் செய்துகொள்ளாததனாலும் சத்திரியர் வரவர சூத்திரத் தன்மை அடைந்தார்கள். (அத்10. சு.43) Continue Reading »