பஜனைப் பாட்டுப் பாடவா தமிழ் இசையை வலியுறுத்தினோம்? – பெரியார்

தமிழ் இசையை நாம் ஏன் வேண்டுகிறோம்? எதற்காக நமக்குத் தமிழில் இசை வேண்டுமென்கிறோம்? தமிழ் மொழியை ஏன் வேண்டுகிறோம்? ஸ்காந்தத்தை ‘கந்த புராணம்’ என்றும், கிருஷ்ணனை ‘கிருட்டிணன்’ என்றும், ‘ஹோம் நமஹா என்பதை ‘ஓம் நமோ’ என்றும், நரசிம்ஹமூர்த்தி என்பதை ‘சிங்கமுகக் கடவுள்’ என்றும், தசகண்ட ராவணன் என்பதை ‘பத்துத்தலை இருட்டுத் தன்மையன்’ என்றும் மொழி பெயர்த்துக் கொண்டு வணங்கி, நம்பி, திருப்தி அடையவா என்று கேட்கிறேன். Continue Reading »

கந்தசஷ்டி

இந்த சுப்ரமணியன் பிறப்பு அல்லது கந்தசஷ்டி என்பது புராண ஆபாசங்களில் மோசமான ஒன்றாகும். ஒரு சமயம் தேவர்கள் எல்லாம் போய் சிவனிடம் கேட்டார்களாம்.

” உலகில் ராட்சதர் கொடுமை அதிகமாய்விட்டது; அதை எங்களால் தாங்கமுடியவில்லை. ஆகவே அதைத் தாங்கக்கூடிய அளவுக்கு அவர்களை அழிக்கக்கூடிய வல்லமை பொருந்திய ஒரு பிள்ளையைப் பெற்றுத் தரவேண்டும்” என்று வேண்டினார்கள் . அதற்குச் சிவனும் இணங்கி பார்வதியைத் திருமணம் செய்துகொண்டு பிள்ளைபெறும் முயற்சியில் அவளோடு கலவிசெய்ய இறங்கினானாம். Continue Reading »

புராணங்களும் வேதங்களும் கள் குடித்த பைத்தியக்காரனின் உளறல்களே !

இன்று தமிழர் சமுதாயம்தான் உலகிலேயே காட்டுமிராண்டி வாழ்வு வாழ்ந்து வருகிற சமுதாயமாக இருக்கிறது. உலகிலுள்ள 280 கோடி மக்களில் யாரும் இவ்வளவு பிறவி இழிவான நிலையில் முட்டாள்தனமாக வாழ்பவர்களில்லை. நமது நாட்டைப் பிடித்துள்ள ‘நோய்கள்’ மூன்று. அவை : 1. கடவுள், மதம், சாஸ்திரங்கள் 2. சாதி 3. ஜனநாயகம் என்பன. நம்மை அரித்துவரும் நோய்கள்: 1. பார்ப்பான் 2. பத்திரிகைகள் 3. அரசியல் கட்சிகள் 4. தேர்தல்கள் 5. சினிமா ஆகிய இவைகள் ஒழிக்கப்பட்டாலொழிய நமது வாழ்வு சீர்படாது என்று, நான் இங்கு மட்டுமல்ல வடநாட்டிலும், கன்னட, கேரள மாநிலங்களிலும் லட்சக்கணக்கான பொது மக்கள் கூடிய கூட்டங்களில் ஆண்டுக்கணக்காக எடுத்துரைத்து வந்திருக்கிறேன். Continue Reading »

பார்ப்பனர்கள் பார்வையில் ஈழப் பிரச்சினை

பார்ப்பனர்களை அடையாளம் காண வேண்டுமானால் இரண்டு அளவுகோல்கள் இருக்கின்றன; அவற்றின் மூலம் அவர்களைப் பொறி வைத்துப் பிடித்துவிடலாம்.

ஒன்று – சமூகநீதி தொடர்பானது, இன்னொன்று தமிழன் என்ற இனக் கோட்பாடு; இரண்டிலும் அவர்கள் தங்களைப் பார்ப்பனர்கள் என்பதைக் காட்டிக் கொள்வார்கள். Continue Reading »

தீபாவளியா?…

இந்தத் தீபாவளி பற்றிய ஒவ்வொரு செய்தியும் ஒன்றுடன் ஒன்று இடிக்கிறது. இது எல்லாவற்றையுமவிடக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்பதும் உண்மை அன்று. தீபாவளி கொண்டாட்டமும் ஒவ்வொரு பகுதியிலும் வேறு வேறு விதமான வழிபாட்டு முறைகளும் சடங்குகளும் உடையதாக இருக்கிறது. உண்மையை உரக்கச் சொல்வது என்றால் தீபாவளியின் தோற்றம் பற்றிய புதிய எந்த விவரமும் கடவுள் நம்பிக்கையுடையவரும் நம்பும்படியானதாக இல்லை. Continue Reading »