தந்தை பெரியார்

நஞ்சாய் தழைத்திருந்த
வேத விருட்சங்களில்
அமிலம் பாய்ச்சியவன்
செல்வங்களை துரத்தி
கோபுரங்களில் வீற்றிருந்த
குப்பைகளை
துடைத்தெறிந்த சூறாவளி
ஆதிக்கத்தின்
ஆணிவேரை சாய்க்க வந்த
கோடாரி
0 comments Friday 29 Aug 2008 | விமல் | கவிதைகள்

நஞ்சாய் தழைத்திருந்த
வேத விருட்சங்களில்
அமிலம் பாய்ச்சியவன்
செல்வங்களை துரத்தி
கோபுரங்களில் வீற்றிருந்த
குப்பைகளை
துடைத்தெறிந்த சூறாவளி
ஆதிக்கத்தின்
ஆணிவேரை சாய்க்க வந்த
கோடாரி
0 comments Friday 29 Aug 2008 | விமல் | கவிதைகள்
“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”
பனை ஏறும் தந்தை தொழிலில்
இருந்து தப்பித்து தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார்
“பெரியாரின் முரட்டுத்தனமான அணுகுமுறை
அதெல்லாம் சரிபட்டு வராதுங்க ”இதுமுடி
வெட்டும் தோழரின் மகனான எலக்ட்ரிக்கல் என்ஜினியர்.
“என்னங்க பெரியார் சொல்லிட்டா சரியா?
பெரியாரால் அறிமுகப்படுத்தப்பட்ட சுயமரியாதைத் திருமணத்தில் ‘தாலி’ என்கிற அடிமைச் சின்னம் கிடையாது. பண்டையத் தமிழர் திருமணங்களிலும் தாலி என்பது இல்லை.இடையில் ஏற்பட்ட தவறான பழக்கமே இது. தாலி கட்டுவதன் அவசியத்தை பழமைவாதிகளே உயர்த்திப் பிடிக்கிறார்கள்.
தாலி என்பது புனிதச் சின்னம். ஒரு பெண்ணுக்குத் திருமணம் முடிந்துவிட்டது என்பதற்கான அடையாளம். தாலி என்பது பெண்ணுக்குப் பாதுகாப்பு என்பதும் அவர்களின் வாதம்.
0 comments Thursday 28 Aug 2008 | நிர்மலா | பெண்ணியம்

தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் ஸ்பிக் நகர் தோப்புத் தெருவில் உள்ள கோயில் சிறீ மாளிகைப் பாறை கருப்பசாமி கோயில்.
இக்கோயிலில் கிடாவெட்டு முடிந்தவுடன், பக்தர்கள் அன்பளிப்பாக மதுப்பாட்டில்களை சாமியாடிக்குக் கொடுத்தார்களாம்! 21 வயதுள்ள அந்த சாமியாடியாகிய முருகன் ஒரே மூச்சில் 19 ஃபுல் மது பாட்டில் களை அப்படியே (Raw) குடித்து அருள் சொன்னாராம் (16.8.2008).
பக்தி என்றால், இது அல்லவோ பக்தி! பீர் சாமி, பீடி சாமி, கெட்ட வார்த்தை பேசும் சாமி பலே, பலே ஒழுக்கம் வளர்க்க பக்திதான் சரியான இடம் – அப்படித்தானே!
1 comment Thursday 28 Aug 2008 | vanikavelu | சுய சிந்தனை, விழிப்புணர்வு
ரஷ்யா போன்ற நாட்டில் பார்ப்பானும் இல்லை; பறையனும் இல்லை. அந்த நாடுகளிலே என்னதான் அடக்குமுறைகள் இருந்ததாகச் சொல்லப்பட்டாலும், அறிவுக்கும் சிந்தனைக்கும் உரிமை இருந்தது. இந்த நாட்டைப் போல் அதை நினைத்தாலே கடவுள் கண்ணைக் குத்திவிடுவார்; அந்த சங்கதியை ஆராய்ந்தாயானால் நரகத்திற்குப் போய் விடுவாய்; இது கடவுளுக்கு விரோதம் என்கிற மாதிரியான நிலைமை இல்லை.
0 comments Wednesday 27 Aug 2008 | shan | சுயமரியாதை