தீட்டு!

சிலர் கோயிலுக்கு வந்தால் கோயிலும், சாமியும் தீட்டுப்பட்டுப் போவானேன்? சிலர் சாமியைத் தொட்டால் சாமி இறந்து போவானேன்? ஒரே பெயரும், உருவமும் உள்ள சாமிக்கு ஊருக்கு ஒருவிதமாய்ச் சக்திகள் ஏற்பட்டிருப்பானேன்? காசி, பண்டரிபுரம் முதலிய ஊர்களில் உள்ள சாமிகள் யார் தொட்டாலும் சாவதில்லை. அங்குக் கோயிலுக்கு போகிறவர்கள் எல்லாம் தங்களே நேரில் சாமியைத் தொட்டு தலையில் தண்ணீர் விட்டு மலர் போட்டுக் கும்பிடுகிறார்கள்.

 

Continue Reading »

பெண்களுக்கு உரிமை கொடுக்கலாமா?

தோழர்களே!

இதுவரை பல தோழர்கள் பெண்ணுரிமைப்பற்றி சாதகமாகவும், பாதகமாகவும் பேசியவைகளைக் கேட்டீர்கள். நான் தலைமை வகித்ததற்கு ஆக முடிவில் இதைப்பற்றி ஏதாவது இரண்டொரு வார்த்தை சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். நான் சொல்லுவது உங்கள் அபிப்பிராயங்களுக்கு மாறாய் இருந்தாலும் இருக்கலாம். அதனால் பாதகமில்லை.இந்தக் கூட்டம் வாக்குவாதக் கூட்டமானதால் பலவித அபிப்பிராயங்களையும் தெரிய வேண்டிப் பேசுவதே ஒழியவேறில்லை. யார் எதைச் சொன்னாலும் பொறுமையோடு கேட்டு சுருதி, யுக்தி, அனுபவம், என்கின்ற மூன்று தன்மையிலும் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வாருங்கள். Continue Reading »

பறவைக் காய்ச்சல்

மசூதி ஒன்றின் மாடத்தின் மேல் புறா ஒன்று தன்னுடைய குஞ்சுப் பறவைகளுடன்
வசித்து வந்தது. திடீரென்று ஒருநாள் மசூதியின் மேல் பகுதியை இடித்துப்
புதிய கட்டிடம் கட்டுவதற்காக முடிவு செய்யப்பட்டது.

இந்த மசூதியின் மேல் பகுதி இடிக்கப்படும் விபரமறிந்த அந்தப்புறா தன்
குஞ்சுப் புறாக்களுடன் மசூதியை விட்டு வெளியேறியது. சிறிது தூரம் பறந்து
சென்ற அது அங்கு ஒரு கிறிஸ்துவ தேவாலயம் இருப்பதைக் கண்டு அங்கு தனக்கு
பாதுகாப்பு கிடைக்கும் என்று கருதி அந்த தேவாலயத்தில் கோபுர உச்சியில்
தன் குஞ்சுகளுடன் குடியேறியது.

Continue Reading »

Welcome to பெரியார் குரல்::.. 24/7 தமிழ் இணைய வானொலி

Welcome to பெரியார் குரல்::.. 24/7 தமிழ் இணைய வானொலி.