தாலி பற்றி பெரியார் சொல்கிறார்!

பொன்மொழிகள்
பெண்கள் மனிதத்தன்மை அற்றதற்கும்,

அவர்களது சுயமரியாதை அற்றத்தன்மைக்கும்,

இந்தப் பாழும் தாலியே அறிகுறியாகும்.

புருஷர்களின் மிருக சுபாவத்திற்கும்,

இந்த தாலி கட்டுவதே அறிகுறியாகும்.

ஆனால் தங்களை ஈனப்பிறவி என்று நினைத்துக்

கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த வார்த்தை

பிடிக்காது தான். இப்போது தாலி கட்டிக் கொண்டிருக்கும்

பெண்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி வந்திருந்தால்

அறுத்தெரியட்டும். அல்லது –

புருஷர்கள் கழுத்திலும் ஒரு கயிறு கட்ட வேண்டும்.

தங்களைத் தாங்களே அடிமை என்று நினைத்துக்

கொண்டிருக்கின்ற சமூகம் என்றும் உருப்படியாகாது. …….[மேலும்…]

பெண் ஏன் அடக்கப்பட்டாள்..? ஏன் ஒடுக்கப்பட்டாள்..?

எழுச்சிகளும் புரட்சிகளும் காலங்காலமாய் இருந்து வந்தாலும் இன்னும் பெண்ணை இரண்டாந்தரப் பிரஜையாக எண்ணும் மனப்பாங்கு சமூகத்தில் இருந்து விலகவில்லை. பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலைப்போடும் நிலையும் மாறவில்லை. அவளின் அசைவுகள் கூட அலசப் படுகின்றன. உடைகள் பற்றிப் பேசப்படுகின்றன. அணிகலன்கள் பற்றி ஆராயப்படுகின்றன. மேலும்…

மனுநீதி

சூத்திரனுக்குத் தர்மம்

சூத்திரன் சுவர்க்கத்திற்காவது , ஜீவனத்திற்காவது அல்லது இரண்டிற்குமாவது , பிராமணனையே தொழவேண்டும். இவன் பிராமணனை அண்டிய சூத்திரன் என்று ஒருவனுக்குப் பெயர் வந்தால் அதே அவனுக்குப் பாக்கியம். (அத் 10. சு .122)

 

பிராமணர்களை வழிபடாததனாலும் உபநயனம் முதலிய சடங்குகள் செய்துகொள்ளாததனாலும் சத்திரியர் வரவர சூத்திரத் தன்மை அடைந்தார்கள். (அத்10. சு.43) Continue Reading »

பெண் உரிமை பற்றி பெரியார்- இறுதி பகுதி

தாலி கட்டுவதென்பது அன்று முதல் அப்பெண்ணைத் தனக்கு அடிமைப் பொருளாக ஏற்கிறான் என்பதும், அப்பெண் அன்று முதல் ஆணுக்கு அடிமையாகி விட்டாள் என்பது மான கருத்தைக் குறிப்பதற்குத்தான். இதன் காரணமாக் கணவன் மனைவியை என்ன செய்தாலும் யாருக்கும் கேட்க உரிமையில்லை, கணவன் தவறான முறையில் நடந்தால் அவனுக்குத்தண்டனையும் கிடையாது. (வி.15.4.61;1:பெ.செ)

இன்றையப் பெண் எவ்வளவோ கல்வியும் செல்வமும் நாகரிக அறிவும் கவுரவம் உள்ள சுற்றத்தாருக்குள்ளும் சகவாசத்துக்குள்ளும் இருந்துவந்தும்,

Continue Reading »

பெண் உரிமை பற்றி பெரியார்- 2

ஒவ்வொரு பெண்ணும், தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதிபெறத் தக்கபடி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். குறைந்தது தன் வயிற்றுக்குப் போதுமான அளவாவது சம்பாதிக்கத் தகுந்த திறமை இருந்தால், எந்தக் கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான். (வி.24.6.40;3:4)

ஓர் ஆணுக்கு ஒரு சமையல்காரி – ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி – ஓர் ஆணின் குடும்பப் பெருக்கிற்குப் பிள்ளை விளைவிக்கும் ஒரு பண்ணை – ஓர் ஆணின் கண் அழகிற்கு ஓர் அழகிய – அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள்? பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். (கு.21.7.46;2:2) Continue Reading »