தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் ஸ்பிக் நகர் தோப்புத் தெருவில் உள்ள கோயில் சிறீ மாளிகைப் பாறை கருப்பசாமி கோயில்.

இக்கோயிலில் கிடாவெட்டு முடிந்தவுடன், பக்தர்கள் அன்பளிப்பாக மதுப்பாட்டில்களை சாமியாடிக்குக் கொடுத்தார்களாம்! 21 வயதுள்ள அந்த சாமியாடியாகிய முருகன் ஒரே மூச்சில் 19 ஃபுல் மது பாட்டில் களை அப்படியே (Raw) குடித்து அருள் சொன்னாராம் (16.8.2008).
பக்தி என்றால், இது அல்லவோ பக்தி! பீர் சாமி, பீடி சாமி, கெட்ட வார்த்தை பேசும் சாமி பலே, பலே ஒழுக்கம் வளர்க்க பக்திதான் சரியான இடம் – அப்படித்தானே!