உலகில் பெரியார் ஒருவரே!

oct251938 ஆம் ஆண்டு இதே நாளில் (டிசம்பர் 29) தான் தந்தை பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுவும் எந்த நிலையில்?

தந்தை பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் காரணமாக சிறையில் இருந்த காலகட்டத்தில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கமான நீதிக்கட்சியின் கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும்…

கடவுளும் – பண்பும்!

உலகமும் உலகத்தில் காணப்படுவனவும் தெய்வீகத் தன்மையால் ஏற்பட்டவை என்றால், இக்கணக்கற்ற தெய்வீகத் தன்மைகள் ஒவ்வொன்றாக சிறிது சிறிதுகாலமே இருந்து பின்னர் மறைந்து போவானேன்? தெய்வீகத்தன்மை என்பதுவே அநித்தியமா? சும்மா இருந்த கடவுள் திடீரென்று இவ்வுலகத்தை தோற்றுவிக்கும்படியான அவசியமோ, காரணமோ என்ன அவர் மூளையில் பாய்ந்தது? மேலும்…

கடவுளை நம்பும் முட்டாள்களே!

கடவுள்களை நம்பும் முட்டாள்களே!

அதாவது கடவுள் ஒருவர் இருக்கிறார்;

அவரே உலகைப் படைத்து காத்து நடத்தி வருகிறார்;

அவரன்றி ஒரு அணுவும் அசையாது;

அவரே உலக நடப்புக்குக் காரணஸ்தர் ஆவார்

என்றெல்லாம் கருதி வரும் முட்டாள்களே!

கடவுளால் உலகத்திற்கு, மனித சமூதாயத்திற்கு, ஜீவ கோடிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன? மேலும்…

குருட்டு நம்பிக்கைகளை வளர்ப்பதே மதம்!

மனித வர்க்கம் விலங்குகளைப்போல் தனித்தனியே காடுகளில் வாசஞ்செய்து வந்த நிலைமை மாறி, குடிசை கட்டிக் கூடிக் குலவி வாழ ஆரம்பித்த போதே அவற்றிற்குச் சில கொள்கைகள் தேவையாகிவிட்டது. எப்படி எனில், எப்படி தனியே இருக்கும் மக்கள் ஏதாவது ஒரு பொது நன்மையை உத்தேசித்து தங்களுக்கென்று ஒரு சங்கத்தை நிறுவினால் உடனே அதற்குக் கொள்கைகள் நிர்ணயிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகின்றதோ, அதேபோல் மனிதர்களின் கூட்டு வாழ்க்கைக்கு கொள்கைகளை நிர்ணயிக்க வேண்டியதாகி விட்டது. [மேலும்...]

ஜாதியைக் காப்பாற்றும் பல சாதி அபிமானிகளுக்கு ஓர் எச்சரிக்கை

சாதியைக் காப்பாற்றும் பலசாதி அபிமானிகளே! ஆதியில் ஏற்பட்ட நான்கு சாதிகள், 4,000 சாதிகளாகப் பிரிந்ததற்குக் காரணம் ஒரு சாதியும், மற்றொரு சாதியும் மாறிமாறிக் கலந்ததால் ஏற்பட்டது என்று குறித்தும், அப்படி இருந்தும் இன்னும் நம்மவரிலேயே ஒரு கூட்டத்தார் அதாவது, தங்களை ‘வேளாளர்’ என்று சொல்லுபவர்களில் ஒரு சிலர் மேற்படி சாதிக் கிரமத்தை அதாவது ‘ஆதிசாதி’ என்பவைகளான பிராமணன், ஷத்ரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற கிரமத்தை ஒப்புக் கொண்டு தங்களை மாத்திரம் ‘சற்சூத்திரர்’ என்று அழைத்துக் கொண்டும், மற்றொரு சிலர் அச்சாதிக் கிரம வார்த்தைகளை வடமொழிப் பெயர்களால் சொல்லாமல் தென்மொழிப் பெயரால் சொல்லிக் கொள்கின்றனர். Continue Reading »