தீபாவளி கொண்டாடலாமா?

துன்பம் தரும் தீபாவளி

தீபாவளி என்கின்ற வார்த்தைக்கு விளக்கு வரிசை அதாவது விளக்குகளை வரிசையாக
வைத்தல் என்பது பொருள். இது கார்த்திகை தீபம் என்னும் பெயரில் பண்டிகை
நாட்களில் செய்யப்பட்டு வருகிறது. வடநாட்டில் விளக்கு வரிசை வைத்துத்தான்
தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளிப் பண்டிகை தினத்தை, நரக சதுர்த்தசி
என்றும் சொல்வதுண்டு. இதற்குக் காரணம், நரகாசுரன் என்பவன் விஷ்ணுவால்
கொலை செய்யப்பட்டநாள் என்பதாலும். இந்தக் கதை விளக்கம் என்னவென்றால், அது
மிகவும் ஆபாசமானது என்றாலும் ஆரியர்களின் இழிநிலைக்கும், தமிழர்களின்
முட்டாள்தனத்துக்கும் ஆதாரத்துக்காக அதைவும் ஆரியப் புராணப்படியே சற்றுச்
சுருக்கமாக விளக்குவோம். Continue Reading »

சரஸ்வதி பிரம்மனால் உண்டானவளா? அகத்தியரிடத்தில் உற்பத்தியானவளா?

சரஸ்வதி பூஜை கொண்டாடும் தமிழா சரசுவதியின் கதையை அறிவுப்பூர்வமாக அறிந்து கொண்டுதான் கொண்டாடுகிறாயா? சரசுவதியின் கதையை இப்போது அறிந்து கொள்.அதன்பின் சரசுவதி பூஜை கொண்டாடியது எவ்வளவு அசிங்கமான செயல் எனபதை உணர்வாய்!. இதோ சரசுவதியின் கதை:

சரஸ்வதியா? சரசவதியா?
Continue Reading »

ஆயிரம் ஆண்டுகளாக யாருக்கும் தோன்றாத சிந்தனைதான் பெரியாரின் சிந்தனை முறை….

24 ஆகஸ்ட் 2008 அன்று கோவையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில், அதன் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமையில், சீமானின் சிறப்புரையோடு நடந்த ‘வே. மதிமாறன் பதில்கள்’ நூல் அறிமுக விழாவில் வே. மதிமாறனின் ஏற்புரை.)

ன் புத்தகங்களுக்கு எப்போதுமே ஒரு சிறப்பான அறிமுகம் விழா நடத்துக்கிற என் அருமை அண்ணன் ராமகிருஷ்ணன் அவர்களே,
போர்குரலாய் முழுங்கி முடித்திருக்கிற சீமான் அவர்களே,
அண்ணன் ஆறுச்சாமி மற்றும் பெரியர் திராவிடர் கழக தோழர்களே, அனைவருக்கும் வணக்கம்.
Continue Reading »

சீதை இராவணனுடன் சம்மதித்தே சென்றாள் !

மாரீசன்தான் மான் உருவம்கொண்டு வந்துள்ளான் என்ற செய்தி தெரிந்ததும்
அந்த மானைப் பிடிக்கச் சீதை தன் கணவனைக் கட்டாயப்படுத்தி அனுப்புகிறாள்.

லட்சுமணன், ‘இராமனுக்கு ஆபத்து வராது. ஆகவே, உன்னைத் தனியேவிட்டுப்
போகமாட்டேன்’ என்று தடுத்துக் கூறியும் அவனைக் கண்டபடி திட்டிப்பேசி
அந்த இடத்தைவிட்டு அகலச் செய்கிறாள். இதன் மர்மம், தான் தனியே இருக்க
வேண்டும்; அங்கு இராவணன் வரவேண்டும் என்ற முடிவை முன்கூட்டியே
தீர்மானித்துக்கொண்டு தன் கணவனையும் கொழுந்தனையும் துரத்திவிட்டுத்
தான் மட்டுமே தனியே இருக்கிறாள். Continue Reading »

இராமன் மது மாமிசம் சாப்பிட்டதற்கான சான்று இதோ:

கேரளத்தில் மாவலியின் நல்லாட்சிக்குக் கேடு நினைத்தோர், திட்டமிட்டு
செயல்பட்டது போலவே – மாவலி மன்னனை வீழ்த்தியது போல; இங்கும் இந்த
ஆட்சியைத்தான் ஒழித்துவிடவும், அழித்து விடவும் விஷ்ணுவைத் தேடுவதற்கு
மாறாக, விஷ்ணுவைப் போன்று வேறொரு தேவனைத் தேடி அலைகிறார்கள். நேரடியாக
அவர்களுக்கு விழி முன்னே விஷ்ணு தென்படாத காரணத்தால் விஷ்ணுவின் அவதாரம்
தானே ராமன், அந்த ராமனைப் பயன்படுத்தி இந்த ஆட்சியை விழுங்கி விடுவோம்
என்று வில்லை வளைக்கிறார்கள். Continue Reading »